உத்திரபிரதேசம் மற்றும் சண்டிகர் மாநிலங்களில் மின்வாரியங்களை தனியார் மயமாக்குவதை கண்டித்து போராடிகொண்டிருக்கும் அம்மாநில மின்வாரிய பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், மின்சார வாரியங்களை தனியார் மயமாக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி மயிலாடுதுறை மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு மின்வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
எம்ப்ளாயீஸ் பெடரேஷன் திட்ட உதபத்தலைவர் தனசேகரன் தலைமை வகித்தார். பொறியாளர் சங்கம் அருட்செல்வன் முன்னிலை வகித்தார். செயலாளர் சாரதி உட்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் மின்வாரிய பொறியாளர்கள், ஊழியர் சங்கத்தினர் திரளாக கலந்துகொண்டனர். செயல்தலைவர் சேகர் நன்றி கூறினார்.
0 Comments