பத்திரம் பதிவு செய்ய மறுத்த சார்பதிவாளர்..... ஆத்திரத்தில் ஊழியர்கள் மீது பெட்ரோலை ஊற்றிய நபர்.....

 


குமரி மாவட்டம் கருங்கல் அருகே சுண்டவிளை பகுதியில் ஜெஸ்டஸ் மார்ட்டின் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது சகோதரியிடமிருந்து நிலத்தை வாங்கி, அதை பதிவு செய்ய கருங்கல் சார்பதிவாளர் சென்றுள்ளார். ஆனால் சார் பதிவாளர் ஹரிகிருஷ்ணன் பத்திரப்பதிவு செய்யாமல் திரும்பி அனுப்பியுள்ளார். இதையடுத்து அவர் மீண்டும் சார் பதிவாளரிடம் முறையிட்டுள்ளார்.

ஆனால் மீண்டும் அதிகாரி மறுத்ததால், ஆத்திரமடைந்த ஜெஸ்டஸ் மார்ட்டின் தண்ணீர் பாட்டிலில் தான் மறைத்துக் கொண்டு வந்த பெட்ரோலை எடுத்தார். அதை தன் மீது, சார் பதிவாளர் மற்றும் ஊழியர்கள் மீதும் ஊற்றி தீ வைக்க முயன்றுள்ளார். ஆனால் நல்வாய்ப்பாக தீப்பற்றவில்லை. இதனால் அதிர்ந்து போன ஊழியர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி தகவல் அறிந்து விரைந்து வந்த காவல் துறையினர் ஜெஸ்டஸ் மார்ட்டினை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

0 Comments