திருச்செங்கோடு: கோவில் பூசாரிகளுக்கு இலவசமாக மாடுகள் வழங்கப்பட்டது


திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு வேண்டுதல் காரணமாக பக்தர்கள் மாடுகள் வழங்குவது வழக்கம். அவ்வாறு வழங்கப்படும் மாடுகளை பராமரிக்கும் அளவுக்கு போக மீதி உள்ளவற்றை ஒரு கால பூஜை செய்யும் கோவில் பூசாரிகளிடம் கொடுத்து பராமரிக்கும் திட்டத்தின் கீழ் இருப்பு இருந்த 15 மாடுகளில் ஒன்பது மாடுகளை சிலம்ப கவுண்டம்பாளையம்,மொளசி,தோக்கவாடி இறையமங்கலம் பாப்பம்பாளையம், உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சிறு கோவில் பூசாரிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி மலைக்கோவிலில் நடைபெற்றது.

 அறங்காவலர் குழு தலைவர் தங்கமுத்து ஒன்றிய குழு பெருந்தலைவர் சுஜாதா தங்கவேல் ஆகியோர் பூசாரிகளுக்கு மாடுகளை வழங்கினர்.குலுக்கல் முறையில் பூசாரிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு உரிய எண்கள் பொறிக்கப்பட்டிருந்த மாடுகள் வழங்கப்பட்டது .விலை இல்லாமல் வழங்கப்படும் இந்த மாடுகளை முறையாக பராமரித்து பலன் பெற வேண்டுமென பூசாரிகளை அறங்காவலர் குழு தலைவர் தங்கமுத்து கேட்டுக்கொண்டார்.

 ஜெ.ஜெயக்குமார் நாமக்கல் மாவட்ட செய்தியாளர்

Post a Comment

0 Comments