கேப்டன் விஜயகாந்த் நினைவு தின அமைதி பேரணிக்கு அனுமதி மறுப்பு.... தேமுதிகவினர் போராட்டம்

 


கேப்டன் விஜயகாந்த் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று சென்னையில் தேமுதிகவினர்  அமைதி பேரணி நடத்த அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் தேமுதிக கட்சியின் செயலாளர் பார்த்தசாரதி, முதல்வர் ஸ்டாலின் அமைதி பேரணி நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். முன்னதாக கலைஞர் நினைவு தினத்தை முன்னிட்டு திமுகவினர் அமைதி பேரணி நடத்திய நிலையில் அதற்கு மட்டும் அனுமதி கொடுத்துவிட்டு தற்போது கேப்டன் நினைவு தினத்திற்கு அனுமதி மறுப்பது ஏன் அரசியல் காழ் புணர்ச்சியா அல்லது காவல்துறையின் காழ்ப்புணர்ச்சியா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்நிலையில் அனுமதி வழங்குவது தொடர்பாக முதல்வரை சந்திக்க தேமுதிகவினர்  திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது சென்னை கோயம்பேட்டில் அவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். மேலும் இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments