புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கருக்கா குறிச்சி வடக்கு கிராமத்தில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மூத்த மகள் சௌமியா புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் டிப்ளமோ நர்சிங் மூன்றாவது ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 25-ஆம் தேதி நள்ளிரவு நேரம் சௌமியா திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து சௌமியாவின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். நேற்று காலை அதே பகுதியில் இருக்கும் ஒரு விவசாய கிணற்றில் சௌமியாவின் சடலம் மிதப்பதாக உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று போலீசாரிடம் இறந்து போனது சௌமியா தான் என்பதை உறுதிப்படுத்தினர். பின்னர் அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
0 Comments