பல்லாவரத்தில் அமித்ஷாவை கண்டித்து அருந்ததி கட்சியினர் ஆர்ப்பாட்டம்


அம்பேத்கரை அவதூறாகக பேசியதாக மத்திய  அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர் அருந்ததி கட்சி சார்பில் அதன் தலைவர் புருஷோத்தமன் தலைமையில் பல்லாவரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்ட அருந்ததி கட்சியினர் அமித்ஷாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.அபயம் அமைப்பின் நிறுவனர் லெமூரியர் பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி ஜீவசரவணன் அம்பேத்கர் பகுத்தறிவு இளைஞர் இயக்க நிர்வாகி மணி அருந்ததி கட்சி நிர்வாகிகள் பொது செயலாளர் தேவேந்திரராவ்,  மோகனகிருஷ்ணன், வராதராஜன், விஜி, மோகன், சதீஷ், மதுரை ஏழுமலை சங்கர், பெருங்குடி, குணசுந்தரம் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments