வலங்கைமானில் இயேசு பிறப்பு விழாவை அறிவிக்கும் விதமாக, குழந்தை இயேசுவை கையில் ஏந்தி ஒவ்வொரு வீடாக பவனி வந்து சிறப்பிக்கும் நிகழ்வு நடைபெற்றது


திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் கும்பகோணம் மறை  மாவட்டம் வலங்கைமான் பங்கு, வலங்கைமான் மணவெளி தெரு கிராம மக்கள் அனைவரும் இணைந்து வலங்கைமான் பங்கு தந்தை ஆல்பர்ட் ஓசிடி, ஆரோக்கியசாமி ஓசிடி தலைமையில், அருட் சகோதரிகள், கிராம மக்கள் அனைவரும் இணைந்து, கிறிஸ்து பிறப்பு விழாவை அறிவிக்கும் விதமாக குழந்தை இயேசுவை கையில் ஏந்தி ஒவ்வொரு வீடாக பவனி வந்து சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியை மணவெளி தெரு முக்கியஸ்தர்கள் ஏற்பாடு செய்திருந்தனர், அனைவரும் இறைவன் இயேசு கிறிஸ்துவை வரவேற்று பிரார்த்தனை செய்தனர்.

Post a Comment

0 Comments