பெஞ்சல் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி பெரிதும் பாதிக்கப்பட்டது. புயல் காரணமாக விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட ஏழு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் அமைச்சர் பொன்முடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக விழுப்புரத்திற்கு சென்றுள்ளார்.
ஏற்கனவே அந்த பகுதி மக்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்த சென்ற அமைச்சர் பொன்முடி மீது கோபமடைந்த கிராம மக்கள் அவர் மீது சேற்றை வாரி இறைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் அவரை பத்திரமாக அழைத்துச் சென்றனர்.
0 Comments