பள்ளிகளில் பெற்றோருக்கு மாணவர்கள் பாதபூஜை செய்யக்கூடாது என்ற பள்ளிக்கல்வித்துறையின் சுற்றறிக்கைக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம் என்பதுதான் தமிழர்களின் அடிப்படை பண்பாடு எனவும் பெற்றோரை போற்றுதல் தமிழ் மரபிலேயே உள்ள நல்லொழுக்கம் எனவும் தெரிவித்துள்ளார்.
தனியார் பள்ளியில் மாணவர்களின் விருப்பத்துடன் தான் பாத பூஜை நடப்பதாக தெரிவித்துள்ள அவர், மாணவர்களை யாரும் கட்டாயப்படுத்துவதில்லை எனவும் பதிவிட்டுள்ளார்.பள்ளிகளில் பண்பாட்டு போதனை வகுப்பு நடத்தப்பட வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் அதை செயல்படுத்த பள்ளிக்கல்வித்துறை மறுப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தி.மு.க.,வின் அரசியல் பிரிவு போல் செயல்படுவதை, பள்ளிக்கல்வித் துறை நிறுத்திக்கொள்ள வேண்டும் என விமர்சித்துள்ள காடேஸ்வரா சுப்ரமணியம், பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கையை திரும்பப்பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
0 Comments