பருத்தி மூட்டை குடோன்லயே இருந்துருக்கலாம்...... வெள்ள நீரை மோட்டார் பம்ப் மூலம் உறிஞ்சி பின்னர் அதே இடத்தில் திறந்துவிட்ட அவலம்

 


தமிழ்நாட்டில் பெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் நேற்று முதல் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை பெய்த நிலையில் ஏரிகள் நிரம்பி விட்டதால் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

பருத்திமூட்டை வீடியோ பார்க்க கிளிக் செய்யவும்

 இதேபோன்று டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லையில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாக மழை பெய்து வரும் நிலையில் கிட்டத்தட்ட 50 சென்டிமீட்டருக்கும் அதிகமாக மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில் சென்னையில் மழை நீர் தேங்கும் போது உடனடியாக மோட்டார் பம்புகள் மூலம் நீர் உறிஞ்சப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்படுவதாக அரசு அறிவித்தது.

இந்த நிலையில் சென்னையில் உள்ள ஒரு பகுதியில் மோட்டார் பம்புகள் மூலம் வெள்ள நீர் உறிஞ்சப்படுகிறது. பின்னர் அந்த வெள்ள நீரை மீண்டும் அதே இடத்தில் வண்டியிலிருந்து திறந்து விட்டனர். இதை பார்த்த மக்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கு வெள்ள நீரை நீங்கள் மோட்டார் பம்பு மூலம் அகற்றாமல் இருக்கலாம் என்று கூறினார்கள். 

மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் ஆதரவாளர் ஒருவர் இந்த வீடியோவை வெளியிட்டு மழை நீரை மோட்டார் வைத்து எடுத்த இடத்திலேயே கொட்றதுக்கு பெயர் தான் மழைநீர் வடிகால் பணி. திராவிட மாடல் ஆட்சி ROCKED, மக்கள் SHOCKED என்று வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும் இதே போன்று நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோவை பார்த்து கலாய்த்து தள்ளும் நிலையில் விமர்சனங்களும் எழுந்துள்ளது.

Post a Comment

0 Comments