சென்னை மாவட்டத்தில் உள்ள பரங்கிமலை காவல் நிலைய குடியிருப்பில் சத்யபிரியா என்ற மாணவி வசித்து வந்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு சதீஷ் என்பவர் நடைமேடையில் இருந்து தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்த ரயிலில் சத்யபிரியாவை தள்ளிவிட்டு கொலை செய்தார். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சத்யபிரியா பேசாமல் இருந்ததால் சதீஷ் ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்தது உறுதியானது.
சத்யப்ரியாவும் சதீஷும் காதலித்து வந்ததாக கூறப்பட்ட நிலையில் சத்யாவின் பெற்றோர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் சத்யா சதீஷிடம் பெறுவதை நிறுத்திவிட்டார். இதனால் கோபத்தில் சதீஷ் சத்யாவை கொலை செய்ததாக தகவல் வெளியானது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் 70 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இன்று மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.
0 Comments