கீழ்வேளூர் ரோட்டரி சங்கம், நாகப்பட்டினம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் கீழ்வேளூர் பிரபாகர் நினைவு மழலையர் தொடக்கப்பள்ளி இணைந்து கீழ்வேளூரில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் இன்று நடைப்பெற்றது.
பிரபாகர் நினைவு மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் நடைப்பெற்ற முகாமில் 600 க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்துக் கொண்டனர். இதில் கண் பரிசோதனை, இரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது. கண் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியோர்க்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்வதற்காக பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு 100 க்கும் மேற்பட்டோர் வாகனம் மூலமாக அழைத்து செல்லப்பட்டனர்.
அதே போன்று கிட்ட பார்வை, தூரப் பார்வை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கு இலவச கண் கண்ணாடி வழங்கப்பட்டது. இதில் கீழ்வேளூர் ரோட்டரி சங்க நிர்வாகிகள், பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், பிராபகர் நினைவு மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
மக்கள் நேரம் எடிட்டர் & நாகை நிருபர் ஜீ.சக்கரவர்த்தி
0 Comments