நாகப்பட்டினம் மாவட்டம் நகரப் பகுதியில் அமைந்துள்ள புதிய பேருந்து நிலையத்தை செல்லூர் கிராமத்தில் மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாகை மாவட்ட வளர்ச்சி குழுமம் சார்பாக உண்ணாவிரத நடைபெறுவதாக அறிவித்ததை தொடர்ந்து நாகை கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் நாகை மாவட்ட வளர்ச்சி குழுமம் நிர்வாகிகள் மற்றும் வணிகர்கள் என 80 கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர். மேலும் பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டாத நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை நாகை மாவட்ட வளர்ச்சி குழு நிர்வாகிகள் உண்ணாவிரதம் நடத்துப் போவதாக தெரிவித்தனர்.
0 Comments