மேட்டூர் 840 மெகாவாட் அனல் மின் நிலையத்தின் ஆறாவது யூனிட்டில் இன்று மாலை திடீர் விபத்து ஏற்பட்டது. சாம்பல் செல்லும் குழாய் மற்றும் மேலடுக்கு சாய்ந்தது. இதில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தது வெங்கடேஷ் மற்றும் பழனிசாமி என்பதும், இவர்கள் ஒப்பந்த தொழிலாளர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்னும் சிலர் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. அவர்களை தேடும் பணி நடக்கிறது. இதனால் மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
0 Comments