தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஆரணியில் திமுக பொறியாளர் அணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது


திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம்,ஆரணி சத்திரம் பஸ் நிறுத்தம்கொண்டனர்.ருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி சார்பில் தமிழக துணை முதல்வரும்,கழக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கட்சிக் கொடியை ஏற்றி வைத்து 100 தூய்மைப் பணியாளர்களுக்கு உடை மற்றும் அறுசுவை உணவு, பொதுமக்கள் 500 பேருக்கு அறுசுவை உணவு என நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு,திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி அமைப்பாளர் ஆரணி எஸ்.ரோஸ் பொன்னையன் தலைமை தாங்கினார்.ஆரணி பேரூர் செயலாளர் பி.முத்து,முன்னாள் பேரூர் செயலாளர்கள் டி.கண்ணதாசன், ஜி.பி.வெங்கடேசன்,பேரூர் பொருளாளர் கு.கரிகாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில்,சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும்,கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜெ.கோவிந்தராஜன் கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்து தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றி பேசினார்.

இந்நிகழ்ச்சியில்,மாவட்ட அவைத் தலைவர் மு.பகலவன், மாவட்ட பொருளாளர் ரமேஷ், மாவட்ட துணைச் செயலாளர்கள் கோளூர் கதிரவன்,கே.வி.ஜி.உமாமகேஸ்வரி, ஒன்றிய கழகச் செயலாளர்கள் பி.ஜே.மூர்த்தி,மு.மணிபாலன்,வழுதிகை செல்வசேகரன், ஆ.சத்தியவேலு,மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் ஈஸ்வரகுமார், மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் கவுன்சிலர் ரகுமான்கான், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் கவுன்சிலர் சுபாஷினி,மாவட்ட நெசவாளர் அணி ஜெயக்குமார்,மாவட்ட விவசாய அணி எல்.உதயகுமார்,மாணவர் அணி துணை அமைப்பாளர் தமிழழகன்,வார்டு செயலாளர்கள் நீலகண்டன்,நாகராஜ், சாய்சத்யா,புதுநகர் பாலாஜி,சூர்யா,நாகராஜ்,சுல்தான்,பாஸ்கர்,இளைஞர் அணி தமிழ்ச்செல்வன்,வசந்தகுமார்,தகவல் தொழில்நுட்ப அணி சந்தோஷ்பிரபா,மாணவரணி விமல்ராஜ்,பொறியாளர் அணி பிரபாகரன் மற்றும் மாவட்ட,ஒன்றிய,பேரூர்,கிளை கழக நிர்வாகிகள்,அணிகளின் அமைப்பாளர்கள்,உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments