ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் இன்று மாலை தகனம்

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருமுறை இருந்தவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். இவர் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ ஆவார். இவர் கடந்த மாதம் உடல் நலக்குறைவினால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார்.

 அவருக்கு 75 வயது ஆகும்  நிலையில் அவருடைய உடல் நேற்று பொதுமக்கள் அதிகரிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு இறுதி சடங்கு நடைபெற உள்ளது. இன்று பிற்பகல் வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக அவருடைய உடல் வீட்டில் வைக்கப்படும் நிலையில் இதைத்தொடர்ந்து மாலை 4 மணி அளவில் மின் மயானத்தில் அவருடைய உடல் தகனம் செய்யப்படவுள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் சிலரும் இன்று டெல்லியில் இருந்து இரங்கல் தெரிவிப்பதற்காக நேரில் வருகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments