விஜயின் முகத்தை மார்பில் பச்சை குத்தி கொண்ட நடிகர் தாடி பாலாஜி

 தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவர் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக்கழகம் என்று அரசியல் கட்சியினை தொடங்கிய நிலையில் கடந்த அக்டோபர் மாதம் முதல் மாநாட்டினை நடத்தி முடித்தார். நடிகர் விஜயின் முதல் மாநாட்டு பணிகளை தாடி பாலாஜி கவனித்து கொண்டார். அவர் புஸ்ஸி ஆனந்த் காலில் விழுந்து ஆசி வாங்கி மாநாட்டு பணிகளை கவனித்துக் கொண்ட நிலையில் அவர் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்ததாக கூறப்பட்ட நிலையில் ஆனால் அவர் அதனை மறுத்தார்.

இந்நிலையில் நடிகர் தாடி பாலாஜி தன்னுடைய நெஞ்சில் விஜயின் படத்தை தற்போது பச்சை குத்தியுள்ளார். அதோடு என் நெஞ்சில் குடியிருக்கும் என்ற வாசகம் தன்னை மிகவும் ஈர்த்ததாக கூறி அந்த வாசகத்தையும் சேர்த்து பச்சை குத்தியுள்ளார். மேலும் இதற்கான காரணத்தை பற்றி அவர் கூறும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

Post a Comment

0 Comments