ஜாதிய வன்கொடுமைகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை..... தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் குற்றச்சாட்டு.....

 


தேனிமாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கண்டமனூரில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு அவரது 68 ஆம் நாள் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளர் மள்ளர் பாலா தலைமையிலும் மாவட்ட தலைவர் வேந்தர் பாலா முன்னிலையில் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.அதனைத் தொடர்ந்து  அம்பேத்கரின் திருஉருவ சிலை முன்பாக அவரது புகழை போற்றும் விதமாக  வீரவணக்கம் செலுத்தப்பட்டது.இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தேனி  மாவட்ட செயலாளர் மள்ளர் பாலா தேனி மாவட்டத்தில் ஜாதியை வன்கொடுமைகள் அதிகமாக நடந்து கொண்டிருக்கின்றன.

 இதுகுறித்து தேனி மாவட்ட  நிர்வாகத்திடம் பலமுறை புகார் கொடுத்தும் பல போராட்டங்களை நடத்தியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. தேவேந்திரகுல வேளாளர் மக்கள் புகாரை ஏற்று நடவடிக்கை எடுக்க தேனி மாவட்டம் நிர்வாகம் தயங்குகிறது. குறிப்பாக பெரியகுளம் அருகே மருகால்பட்டியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை இல்லை. உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மேலும் தேனிமாவட்ட நிர்வாகம் எங்களது கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கைகளை  எடுக்காவிட்டால் கட்சியின் சார்பாக போராட்டம் நடத்தப்படும் என்றார்.

Post a Comment

0 Comments