இரட்டை இலை சின்னம் விவகாரம்..... தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு....


 அதிமுக கட்சியில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு உட்கட்சி பூசல்கள் ஏற்பட்ட  நிலையில் அதன் பிறகு ‌ பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி நியமிக்கப்பட்டார். இந்நிலையில் இரட்டை இலை சின்னம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக தீர்ப்பு வெளிவந்தது. இந்த நிலையில் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை கொடுத்ததை எதிர்த்து புகழேந்தி தாக்கல் செய்த மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று தற்போது டெல்லி உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

அதாவது நீதிமன்ற தீர்ப்பை தேர்தல் ஆணையம் அமல்படுத்தாமல் இருப்பதாக கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கை டெல்லி உயர்நீதிமன்றத்தில் புகழேந்தி தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் தற்போது வழக்கை விசாரித்த நீதிமன்றம் இரட்டை இலை சின்னம் தொடர்பாக விரைந்து விசாரிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் முன்னதாக இரட்டை இலை சின்னம் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆகையோடு தனித்தனியாக பதில் அளிக்க வேண்டும் என்று முன்னதாக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Post a Comment

0 Comments