பாவூர்சத்திரத்தில் எம்.ஜி.ஆர்.நினைவு தினம் அனுசரிப்பு

 


பாவூர்சத்திரத்தில் கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் எம்.ஜி.ஆரின் நினைவு தின விழா அனுசரிக்கப்பட்டது. பாவூர்சத்திரம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் அமல்ராஜ் தலைமை வகித்தார். தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமோகன்தாஸ்பாண்டியன் கலந்து கொண்டு, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணை செயலாளர் குணம்,  விவசாய அணி தலைவர் குத்தாலிங்கம், துணைத்தலைவர் நம்பிராஜன், ஒன்றிய கவுன்சிலர்கள் மார்த்தாள் சுரேஷ், அருமை கண்ணன், மாணவரணி பொருளாளர் சேர்மபாண்டி, ஊராட்சி மன்ற தலைவர் ஐவராஜா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ் (எ) ராமசாமி, கதிரவன், மணிவண்ணன், ஒன்றிய இணை செயலாளர் கவிதா, பொருளாளர் தர்மராஜ், அவைத்தலைவர் ராமையா பாண்டியன், அண்ணா தொழிற்சங்க தலைவர் மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments