ஹனிமூன் சென்றுவிட்டு திரும்பிய புதுமண தம்பதி விபத்தில் பலி


 கேரள மாநிலத்தில் நிகில் (27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த மாதம் 30 ஆம் தேதி அனு (26) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இதை தொடர்ந்து இருவரும் மலேசியாவுக்கு ஹனிமூன் சென்றனர். அவர்கள் இன்று காலை தங்களுடைய சொந்த ஊருக்கு திரும்ப நிலையில் காரில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் சென்ற கார் பத்தினம் திட்டா அருகே சென்றபோது, அவ்வழியாக சபரிமலை பக்தர்கள் வந்த பேருந்தின் மீது பயங்கரமாக மோதியது.

இதில் காரின் முன் பக்கம் அப்பளம் போல் நெருங்கியது. இதில் இளம் ஜோடி உட்பட காரில் இருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருமணம் ஆகி என்னும் வாழ்க்கையை கூட தொடங்காத நிலையில் இளம் ஜோடி விபத்தில் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments