அமெரிக்காவில் புதிய அதிபராக விரைவில் ட்ரம்ப் பதவியேற்க இருக்கிறார். அவர் தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில் அதிபராக பதவியேற்ற பிறகு என்ன செய்வேன் என்பது குறித்து அடுத்தடுத்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் புதிய அதிபராக பொறுப்பேற்ற பிறகு பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
அதாவது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்களில் மரண தண்டனையை வழங்க வேண்டும் என்று நீதித்துறைக்கு உத்தரவிடுவேன் என்று அறிவித்துள்ளார். மேலும் 37 கைதிகளின் மரண தண்டனையை ஜோபைடன் குறைத்த நிலையில் அதனை விமர்சித்த ட்ரம்ப் மிக மோசமான கொலை குற்றவாளிகளை எப்போதும் மன்னிக்க முடியாது என்றார்.
மேலும் நான் அதிபராக பொறுப்பேற்ற பிறகு அமெரிக்காவை சட்டம் ஒழுங்குள்ள ஒரு பொறுப்புள்ள நாடாக மாற்றுவேன் என்று தெரிவித்துள்ளார்.
0 Comments