வழக்கறிஞரை வீடியோ காலில் மிரட்டிய போலி அதிகாரி

 


சென்னை கொரட்டூர் கேசவன் நாயக்கர் தெருவில் விவேக் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் இவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது.

 அவர்கள் ‘Telecom Regulatory Authority India’ என்ற அரச அமைப்பிலிருந்து பேசுகிறோம் என்று கூறியுள்ளனர். உங்களின் ஆதார் அட்டை எண்ணை பயன்படுத்தி, தொலைபேசி எண் பெற்று அதன் மூலம் மும்பையில் சட்ட விராத செயல்களில் ஈடுபட்டு உள்ளதாக கூறினார். இதைத்தொடர்ந்து காவல் அதிகாரி உடை அணிந்து ஒருவர் வீடியோ காலில் பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, நான் மும்பையில் இருந்து பேசுகிறேன். விவேக் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

FIR NO MHO1451024 என்ற குற்ற எண் ஒதுக்கீடு ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். மேலும் கனரா வங்கியில் ஒரு அக்கவுண்ட் உள்ளதாகவும் அவர் மிரட்டினார். இதையடுத்து விவேக்கை கைது செய்யப் போவதாகவும், காலை துண்டிக்காமல் இருக்குமாறும், வங்கி கணக்குகளை ஆராய வேண்டும் என்று கூறி அவரிடம் கேட்டுள்ளார். ஆனால் விவேக் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் சிறிது நேரத்தில் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இது குறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

அதோடு இதுபோன்ற அழைப்புகள் அடிக்கடி வருவதால் மன உளைச்சலும், அச்சமும் உள்ளது என்று கூறினார். எனவே புகாரை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த சம்பவத்தை அவர் வீடியோவாக பதிவு செய்து அவர் ஆதாரத்துடன் புகார் அளித்தார். இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

0 Comments