எங்கள் மீது சேறை வீசி விட முடியுமா? எங்க ஆளுங்க விட்டுருவாங்களா - அமைச்சர் பொன்முடி

 


பெஞ்சல் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி பெரிதும் பாதிக்கப்பட்டது. புயல் காரணமாக விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட ஏழு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் அமைச்சர் பொன்முடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக விழுப்புரத்திற்கு சென்றுள்ளார். அவர் இருவேல்பட்டு பகுதிக்கு சென்றபோது காரில் இருந்தபடியே அவர் பார்வையிட்டதாக தெரிகிறது.

ஏற்கனவே அந்த பகுதி மக்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அமைச்சரை பார்த்ததும் கோபமடைந்த கிராம மக்கள் அவர் மீது சேற்றை வாரி இறைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் அவரை பத்திரமாக அழைத்துச் சென்றனர்.

இந்த நிலையில் விழுப்புரத்தில் தன் மீது சேற்றை வீசிய சம்பவம் குறித்து அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, அரசியலாக வேண்டும் என்பதற்காகவே என் மீது சிலர் சேறு அடித்துள்ளனர். அவர்கள் எந்த கட்சியை சேர்ந்தவர்கள் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். அதுவும் நாங்கள் வரும்போது பின்னால் இருந்து லைட்டாக சேறை தெளித்துள்ளனர். எங்கள் மீது சேறை வீசி விட முடியுமா? எங்க ஆளுங்க விட்டுருவாங்களா என கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments