பொதுக்குழு கூட்ட மேடையிலேயே மோதிக்கொண்ட அப்பா-மகன்

 


புதுச்சேரியில் பாமக பொதுக்குழு கூட்டம் மேடை நடைபெற்றது. அப்போது பாமக மாநில இளைஞரணி சங்கத் தலைவராக முகுந்தன் என்பவரை நியமித்தது தொடர்பாக அந்த கட்சியின் சிறப்பு பொதுக்குழு மேடையில் ராமதாஸுக்கும் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கட்சியில் சேர்ந்து நான்கு மாதங்களே ஆனவருக்கு பதவி எதற்கு? எனக்கு யாரும் தேவையில்லை என அன்புமணி ராமதாஸ் கூற, முகுந்தன் தான் பாமக இளைஞரணி தலைவர் என நிறுவன ராமதாஸ் அழுத்தம் திருத்தமாக தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை அடுத்து நான் உருவாக்கிய கட்சியில் நான் சொல்வதை கேட்காவிட்டால் யாரும் கட்சியில் இருக்க முடியாது என பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி ராமதாசை எச்சரித்தார். உடனே அன்புமணி ராமதாஸ் பனையூரில் எனக்கென தனி கட்சி அலுவலகத்தை அமைத்துள்ளேன். என்னை அங்கு வந்து சந்திக்கலாம் என மேடையிலேயே கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Post a Comment

0 Comments