அம்மாபட்டினத்தில் பட்டதாரிகள் கல்வி இயக்கம் தொடக்கம்


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த அம்மாபட்டினத்தில் பட்டதாரிகள் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு முஹம்மது கஸ்ஸாலி தலைமை தாங்கினார். இதில் அம்மாபட்டினம் ஊராட்சிக்கு உட்பட்ட அம்மாபட்டினம், ஆவுடையார்பட்டினம், ஆதிப்பட்டினம் ஆகிய ஊர்களை சேர்ந்த டிகிரி மற்றும் டிப்ளமோ படித்தவர்களை ஒன்றிணைத்து அந்த பகுதிகளில் உள்ள மக்களின் கல்வி முன்னேற்றத்திற்காக ஒரு இயக்கம் துவங்கப்பட்டது. 

அந்த இயக்கத்திற்கு "பட்டதாரிகள் கல்வி இயக்கம்" என பெயரிடப்பட்டுள்ளது. புதிதாக துவக்கப்பட்டுள்ள பட்டதாரிகள் கல்வி இயக்கத்திற்கு நிர்வாக தேர்வும் நடைபெற்றது. அதில்  ஆவுடையூனுஸ் (தலைவர்), அஹமது தம்பி (துணைத்தலைவர்), முகமது ஜலீல் (செயலாளர்), சபீல் அஹமது (பொருளாளர்), ஜகுபர் சாதிக் (துணை செயலாளர்) ஆகியோர்கள் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

மேலும்  புதிய நிர்வாகக்குழு கூடி செயற்குழு உள்ளிட்ட சில பொறுப்புகளுக்கு நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க உள்ளார்கள். கடந்த செப்டம்பர் மாதம் முதல் இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பட்டதாரிகள் ஒருங்கிணைப்பு குழு செய்து வந்த நிலையில் நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு கூட்டத்தில் சுமார் 75 நபர்கள் நேரிலும், இணையவழி மூலமும் பங்கேற்றனர். இதற்கு பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

Post a Comment

0 Comments