தேனி: முன்னறிவிப்பின்றி நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம்..... மாற்றுத்திறனாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்


தேனி மாவட்டம் கம்பத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக கம்பம் அரசு கள்ளர் தொடக்கப் பள்ளியில் பள்ளி குழந்தைகளுக்கான மாற்றுத் திறனாளிகள் சிறப்பு முகாம் நடைபெற்றது.

இந்த முகாம் நடைபெறும் தகவலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலர் முறையாக மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினருக்கு தகவல் தெரிவிக்கவில்லை எனக் கூறி முகாம் நடைபெறும் பள்ளி முன்பாக முல்லை மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கத்தை சேர்ந்தவர்கள் திடீர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது மாற்று திறனாளிகள் அலுவலரை இடமாற்றம் செய்யக்கோரி கோசங்கள் எழுப்பினார்கள்.

இதுகுறித்து சங்கத்தினர் கூறுகையில் ஒவ்வொரு முறையும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலர் எந்த ஒரு தகவலும் தராமல் கண் துடிப்பாகவே முகாம்களை நடத்துகிறார். எனவே அவரை தமிழக அரசு உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Post a Comment

0 Comments