• Breaking News

    எங்கள் சொந்த தெலுங்கு பையன்...... சந்திரபாபு நாயுடு வெளியிட்ட பதிவால் கிளம்பியது சர்ச்சை

     


    உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சீனாவைச் சேர்ந்த லிரெனை வீழ்த்தி, தமிழகத்தின் குகேஷ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இவருக்கு 18 வயதாகிறது. இவர் செஸ் உலகின் 18 வது சாம்பியனாக சாதனை பட்டியலில் இடம் பெற்றுள்ளார். இந்தியா தரப்பில் இவர்தான் 2-வது சாம்பியன் பட்டத்தை வென்ற வீரர் ஆவர். சேம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற இவருக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் உலக செஸ் சாம்பியன்ஷிப்பான சாம்பியனான டி.குகேஷிற்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருந்ததாவது, எங்கள் சொந்த தெலுங்கு பையன் இந்திய கிராண்ட் மாஸ்டர் டி.குகேஷ் சிங்கப்பூரில் 18 வயதில் உலக செஸ் சாம்பியனாகி வரலாற்று படைத்துள்ளார். இந்த சாதனையை ஒட்டுமொத்த தேசமும் கொண்டாடுகிறது. அவர் வரும் காலங்களில் இன்னும் பல வெற்றிகளையும், பாராட்டுகளையும் பெற வாழ்த்துகிறேன் என்று அவர் தெரிவித்து இருந்தார். இந்த பதிவிற்கு நெட்டிசன்கள் பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். சென்னையில் பிறந்தவரான குக்கேஷை, தெலுங்கு பையன் என்று குறிப்பிடுவது சரியா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். நாட்டிற்கு பெருமை தேடி தரும் இளம் சாம்பியனை அனைவரும் உரிமை கொண்டாடுவது தவறில்லை. ஆனால் மொழிவாரியாக பிரிப்பது வீண் சர்ச்சைகளையே உண்டாக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

    No comments