வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சரிடம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி


 பெஞ்சல் புயல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கோரத்தாண்டம் ஆடியது. பெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் பெஞ்சல் புயல் காரணமாக 12 பேர் உயிரிழந்ததாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

புயல் பாதிப்புகள் குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் தற்காலிக சீரமைப்பு பணிக்காக 2,475 கோடி ரூபாய் நிவாரணம் கேட்டுள்ளார். முதற்கட்ட கணக்கெடுப்பில் 69 லட்சம் குடும்பங்கள், 2 லட்சத்து 16 ஆயிரத்து 139 ஹெக்டர் விவசாய நிலம், 9576 கிலோ மீட்டர் சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பெஞ்சல் புயலால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடி முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் கேட்டறிந்தார். தமிழ்நாட்டுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஆதரவையும் ஒன்றிய அரசு வழங்கும் என முதலமைச்சரிடம் பிரதமர் மோடி உறுதி அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Post a Comment

0 Comments