மண்டபம் நிலப்பரப்புடன் ராமேஸ்வரம் தீவை இனப்பதில் பாம்பன் ரயில் பாலம் முக்கிய பங்காற்றி வந்தது. இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரயில் சேவை நிறுத்தப்பட்டது.
அதைத்தொடர்ந்து புதிய பாலத்திற்கான கட்டுமானப் பணி தொடங்கப்பட்ட நிலையில், தற்போது 90 சதவீதப் பணி நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை மத்திய இணையமைச்சர் பூபதி ராஜு ஸ்ரீனிவாச வர்மாவும், ரயில்வே அதிகாரிகளும் நேற்று பார்வையிட்டனர்.அப்போது, தூக்கு பாலத்தை ஏற்றியும், இறக்கியும் அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
0 Comments