இலங்கையில் நடைபெற்று முடிந்த அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி வேட்பாளர் அனுர குமார திசநாயகே பெரும் வெற்றி பெற்றார். தொடர்ந்து நடந்த பார்லிமென்ட் தேர்தலிலும் அவரது கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், அனுர குமார திசநாயகே, 2 நாள் அரசு முறை பயணமாக டிச.15ம் தேதி இந்தியா வருகிறார். இது குறித்து அந்நாட்டு சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிசா நிருபர்களிடம் கூறியதாவது;வரும் 15ம் தேதி, அதிபர் 2 நாள் அரசு முறை பயணமாக இந்தியா செல்கிறார். பயணத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்து பேசுகிறார். இந்த பயணத்தின் போது அதிபருடன், வெளியுறவு அமைச்சர் விஜித ஹெராத், இணையமைச்சர் விஜில் ஜயந்த பெர்னாண்டோ ஆகியோரும் இணைகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.
இலங்கையின் புதிய அதிபராக அனுர குமார திசநாயகே பதவியேற்ற பின்னர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments