மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் மூன்று நாட்கள் ரத்து

 


மேட்டுப்பாளையம்: மழையின் காரணமாக, மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே இயக்கப்படும் மலை ரயில், 17ம் தேதி வரை, ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு, மலை ரயில் தினமும் இயக்கப்படுகிறது. தற்போது குன்னூர் மலைப்பகுதிகளில் மழை பெய்து வருவதால், ரயில் பாதையில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது.

அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ரயில்வே நிர்வாகம், 15, 16, 17 ஆகிய மூன்று தேதிகளுக்கு, ஊட்டி மலை ரயிலை ரத்து செய்துள்ளது.இத்தகவலை, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments