சோழவரம் ஒன்றிய கவுன்சிலர்களின் இறுதிக்கூட்டத்தில், ஐந்தாண்டு பணிகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்த கவுன்சிலர்களுக்கு நன்றி தெரிவித்தனர் சேர்மன்,துணைச் சேர்மன்


சோழவரம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களின் கூட்டம் நேற்று கூட்டரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு ஒன்றிய குழு தலைவர் ராஜாத்தி செல்வசேகரன் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு துணை தலைவர் வே.கருணாகரன், ஒன் றிய ஆணையாளர் சாந்தினி, வட்டார வளர்ச்சி அலுவலர் மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வரவு செலவுகள் குறித்தும், அடிப்படை வசதி கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் பாமக கவுன்சிலர் பிரகாஷ் பேசுகையில், அழிஞ்சிவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட எம்ஜிஆர் நகர் பகுதி யில் பல ஆண்டுகளாக தனியார் நிறுவனத்தினர் பன்றி பண்ணை நடத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதி யில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும், எந்தவித நடவ டிக்கையும் எடுக்கப்ப டாமல் உள்ளது.

எனவே, பொதுப்பணித்துறை மீது கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், விரைவில் பன்றி பண்ணையை அகற்றாவிட்டால் நீதி மன்றம் செல்வோம் என்று தெரிவித்தார். இதனால் கூட்டத்தில் பரப்பரப்பு ஏற்பட்டது. கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் ஒரக்காடு பாஸ்கர் பல்வேறு கோரிக்கைகளை பேச ஆரம்பித்தார்.

 

அதை கூட்டத்தில் கேட்காததால்  வெளிநடப்பு செய்தார் ஒன்றிய கவுன்சிலர்கள், அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.முன்னதாக, உதவியாளர் மீரா கண்ணன் தீர்மானங்களை வாசித்தார். இது ஒன்றிய கவுன்சிலர்க ளின் கடைசி கூட்டம் என்பதால் ஒன்றிய குழு துணை தலைவர் கருணாகரன் ஐந்தாண்டு ஒத்துழைப்பு கொடுத்த அனைத்து கவுன்சிலருக்கும் நன்றி தெரிவித்தார் அனைத்துகவுன்சிலர்களும் ஒருவருக்கொருவர்.

Post a Comment

0 Comments