தென்காசி அருகே அழகப்பபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனை கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் புதிய உறுப்பினர்களாக இணைந்தனர்.
தென்காசி தெற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் புதிய உறுப்பினர்கள் இணையும் விழா அழகப்பபுரத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் நியாஸ் தலைமை வகித்தார். நெல்லை மாவட்ட தலைவர் சஜி, புல்லட் ராஜா, மகளிர் அணி முத்துச்செல்வி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பல்வேறு மாற்று கட்சிகளில் இருந்து விலகி இளைஞர்கள், பெரியவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். கூட்டத்தில் தென்காசி - நெல்லை தேசிய நெடுஞ்சாலை பணியினை விரைந்து முடிக்க வேண்டும், தென்காசி மாவட்டத்திற்கான அரசு மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கான பணிகளை தொடங்கி விரைந்து முடிக்க வேண்டும், தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் போதிய மருத்துவர்களை நியமிக்க வேண்டும், புளியங்குடி பகுதியில் எலுமிச்சைக்கான, குளிர் பதன கிடங்கு அமைக்க வேண்டும், தென்காசி மாவட்டத்தில் மாவட்டத்தில் நறுமண தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் அழகப்பபுரம் ராசு, ஐயப்பன், பாபநாசசிவன், பஞ்சாயத்து தலைவர் முத்தையா, சக்தி, விஜய் மகளிர் அணி முத்துச்செல்வி, நிர்வாகிகள் கிரிப்சன்,குட்டி மைதின்,அன்சர் பாலா,பேச்சிமுத்து அதேஸ்,பிரதீஸ், சிக்கந்தர் மஸ்தான், மாரியப்பன், முத்து, பிரகாஷ்.சிவராமகிருஷ்ணன் துரை,சேர்மதுரை சக்தி,குரு சஞ்சீவ்,சதீஸ்குமார், சதீஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 Comments