தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருவது குறித்தும் அதனை தடுக்க வேண்டும் எனக் கூறியும் தமிழக கவர்னர் ஆர்.என். ரவியை தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சந்தித்து மனு கொடுத்துள்ளதை தொடர்ந்து, மாணவிகளுக்கு பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் உங்களுக்கு பாதுகாப்பு அளிக்க தவெக தயாராக இருக்கிறது என விஜய் எழுதிய கடிதத்தை துண்டு பிரசுரமாக கல்லூரி கள் அருகிலும், பேருந்து நிலையத்திலும் மாணவிகளிடம் கட்சியின் நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதி தவெக மகளிர் அணியினர் வழங்கினர்.
அந்தக் கடிதத்தில் விஜய் கூறியிருப்பதாவதுஅன்பு தங்கைகளே கல்வி வளாகம் முதற்கொண்டு ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் தாய்மார்கள் என் அருமை தங்கைகள் பெண் குழந்தைகள் என அனைத்து தமிழ் பெண்களுக்கும்எதிராக நடக்கும் சமூக அவலங்கள் சட்டம் ஒழுங்கு சீர்கேடுஅவலங்கள் பாலியல் குற்றங்கள் என்று பல்வேறு வன்கொடுமைகளை கண்டு உங்கள் அண்ணனாக மன அழுத்தத்திற்கும் சொல்லுனா வேதனைக்கும் ஆளாகிறேன் யாரிடம் உங்கள் பாதுகாப்பை கேட்பது நம்மைஆளும் ஆட்சியாளர்களை எத்தனை முறை கேட்டாலும்எந்தப் பயனும் இல்லை என்பது தெரிந்தது அதற்காகவே இந்த கடிதத்தை எழுதுகிறேன் எல்லா சூழல்களிலும் நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன் அண்ணனாகவும் அரனாகவும் எனவே எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள் பாதுகாப்பான தமிழகத்தை படைத்தே தீருவோம் அதற்கான உத்தரவாதத்தை நாம் அனைவரும் இணைந்து விரைவில் சாத்தியப்படுத்துவோம் என கூறியுள்ளார்.
இந்த கடிதத்தின் நகலை திருச்செங்கோட்டில் உள்ள மகளிர் கல்வி நிறுவன வளாகம் அருகிலும் புதிய பேருந்து நிலையத்திலும் தமிழக வெற்றிக் கழகத்தின் நாமக்கல்கிழக்கு மாவட்ட தலைவர் ஜெ.ஜெ. செந்தில்நாதன் தலைமையில் திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றி கழக மகளிர் அணியினர் வழங்கினார்கள். நிகழ்ச்சியில் மாவட்ட மகளிர் அணிநிர்வாகி முனீரா பானு, திருச்செங்கோடு நகர துணைச் செயலாளர் மெஹருன்னிஷா,திருச்செங்கோடு நகர தலைவர் நாகராஜ், நகரத் துணைச் செயலாளர் சரவணன் நகர இளைஞரணி தலைவர் இப்ராஹிம் மற்றும் மகளிர் அணியினர் என சுமார் 25க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments