நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் உத்தரவின் பேரில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் மணக்குடி ஊராட்சியில் பேருந்து நிலையம் அருகில் போதை பொருள் ஒழிப்பு மற்றும் கள்ளச்சாராய விழிப்புணர்வு நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் யூ. செல்வகுமார் தலைமையிலும், கிராம நிர்வாக அலுவலர் க.விஜயா முன்னிலையிலும் நடைபெற்றது.சிலம்போசை கலைக்குழுவினரால் ஆடல், பாடல், நாடகம், தெருக்கூத்து உள்ளிட்ட கிராமிய கலை நிகழ்ச்சிகளின் வழியாக பொது மக்களுக்கு விழிப்புணர்வு நடத்தினர்.
இந்நிகழ்ச்சியில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து கண்டு களித்து கள்ள சாராயம் மற்றும் போதைப் பொருள்களின் அவல நிலைகளை பற்றியும் தெரிந்து கொண்டனர். தலைஞாயிறு காவல் நிலைய காவலர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
மக்கள் நேரம் எடிட்டர் & நாகை மாவட்ட நிருபர்
ஜீ.சக்கரவர்த்தி
0 Comments