திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்



 திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பூபதி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 குறிப்பாக பழைய ஓய்வு புதிய திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

 காலண்டர் விடுப்பு ஒப்படைப்பு உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

 கொரோனா காரணமாக காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு உடனடியாக வழங்கிட வேண்டும்.

 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை அரசு பணியாளர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது உடனடியாக வழங்கிட வேண்டும்.

 சிறப்பு காலம் வரை ஊதியம் பெற்று வரும் சத்துணவு அங்கன்வாடி வருவாய் கிராம உதவியாளர்கள் ஊராட்சி செயலர்கள் தொகுப்பூதியம் மற்றும் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் எம்ஆர்பி செவிலியர்கள் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.என்ற 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு பணியாளர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் கென்னடி சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சத்தியமூர்த்தி மாவட்ட பொருளாளர் பழனிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments