ஈரோடு மாவட்டம் , நம்பியூர் ஒன்றிய திமுக சார்பில் திமுக இளைஞர் அணி செயலாளரும் , தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 48 வது பிறந்த நாளை முன்னிட்டு நம்பியூர் திமுக ஒன்றிய செயலாளரும் , நம்பியூர் பேரூராட்சி மன்ற தலைவர் மெடிக்கல் பா. செந்தில்குமார் தலைமையில் நம்பியூர் ஒன்றியம் கோசனம் ஊராட்சி பொத்தபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவ மாணவியர்களின் பயன்பெறும் வகையில் விளையாட்டு மைதானம் அமைத்து கொடுக்கப்பட்டது. மற்றும் பொதுத் தேர்வில் முதல் மூன்று மதிப்பெண்களைப் பெற்ற மாணவிகளுக்கு ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம் கேடயம் மற்றும் மரக்கன்றுகளை மாணவ மாணவியர்களுக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய துணை செயலாளர் வேலுச்சாமி, மாவட்ட பிரதிநிதிஇளங்கோ, கோசனம் உமா சங்கர், நெசவாளர் அணி என்.சி.சண்முகம்,தகவல் தொழில் நுட்ப அணி செந்தில்குமார், பூர்ணசந்திரன், கலை இலக்கிய அணி சண்முகசுந்தரம், முருகசாமி, சிறுபான்மைஅணி அல்லாபிச்சை, வர்த்தகர்அணி சுப்பிரமணியம், ஈஸ்வரமூர்த்தி, முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வெங்கடேஷ் அவர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, பேரூர்,உள்ளாட்சி பிரதிநிதிகள், சார்பு அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் , திமுக நிர்வாகிகள் , பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
0 Comments