நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் குறித்த சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அமித்ஷாவுக்கு எதிராக எதிர்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது ராகுல் காந்தி ஒரு எம்.பி-ஐ தள்ளி விட்டதில் தான் கீழே விழுந்ததால் மண்டை உடைந்து விட்டதாக பாஜக எம் பி பிரதாப் சந்திர சாரங்கி குற்றசாட்டு தெரிவித்துள்ளார். இவருக்கு மண்டை உடைந்து ரத்தம் வழிந்த நிலையில் உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இவர் தான் கீழே விழுந்ததற்கு ராகுல் காந்தி தான் காரணம் என்று குற்றச்சாட்டு தெரிவித்துள்ள நிலையில் தற்போது இதற்கு ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தி கூறியதாவது, அனுப்பிச்சாவை கண்டித்து நாங்கள் போராட்டம் நடத்துவதை கைவிடுமாறு பாஜக எம்பிக்கள் எங்களை மிரட்டுகிறார்கள். நான் நாடாளுமன்றத் தேர்தல் நுழையும் முயன்ற போது பாஜக எம்பிகள் என்னை தள்ளிவிட்டு நாடாளுமன்றத்திற்குள் செல்ல விடாமல் தடுத்தனர். அப்போது மல்லிகார்ஜுன் கார்கே அவர்களை எதிர்த்து தள்ளும்போது இந்த சம்பவம் நடந்திருக்கலாம்.
உங்களின் கேமராக்களில் இருக்கும் என்றார். மேலும் தன்னுடைய மண்டை உடைந்ததற்கு ராகுல் காந்தி தான் காரணம் என்று பாஜக எம்பி குற்றச்சாட்டு தெரிவித்த நிலையில் அதற்கு ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார் .
0 Comments