ஆண்டுதோறும் டிசம்பர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் மனித உரிமைகள் தினம் கொண்டாடப்படுகிறது. கலாச்சாரம், சமூகம் மற்றும் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சாத்தியமான அனைத்து சூழல்களிலும் சமூகத்தின் நலனை உறுதிப்படுத்தவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி மாவட்ட காவல் அலுவலகத்தில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .ச.செல்வராஜ் தலைமையில், காவல்துறையினர் மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு துணைக்காவல் கண்காணிப்பாளர் .கென்னடி , காவல் ஆய்வாளர்கள் செல்வகுமாரி(தனிப்பிரிவு) .கவிதா(இணைய குற்றப்பிரிவு) அவர்கள், காவல் துறை அதிகாரிகள், அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.
0 Comments