கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் திருவள்ளுர் கிழக்கு மாவட்ட திமுக. கும்மிடிப்பூண்டி கிழக்கு, மேற்கு, தெற்கு ஒன்றிய திமுக மற்றும் கும்மிடிப்பூண்டி நகர திமுக சார்பில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏவுமான டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக மாவட்ட அவை தலைவர் பகலவன், மாவட்ட துணை செயலாளர் எம்.எல்.ரவி, மாவட்ட பொருளாளர் எஸ்.ரமேஷ், பொதுக்குழு உறுப்பினர் பா.செ.குணசேகரன், கும்மிடிப்பூண்டி நகர செயலாளர் அறிவழகன் ஒன்றிய செயலாளர்கள் மு.மணிபாலன், ந.பரிமளம், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் பாஸ்கரன், மீனவர் அணி மாவட்ட அமைப்பாளர் என்.ஆறுமுகம், திமுக ஒன்றிய நிர்வாகிகள் திருமலை, பரத்குமார், டி.சி.மஸ்தான், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் வெற்றி என்கின்ற ராஜேஷ் டி.ஜெ.தமிழரசன், ஒன்றிய கவுன்சிலர் ஜெயச்சந்திரன் பேரூராட்சி கவுன்சிலர் கருணாகரன், விடுதலை சிறுத்தைகள் கட்டி மாவட்ட செயலாளர் நீலமேகம், ஒன்றிய நிர்வாகி சுகுமாறன் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து திமுகவினர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து கண்டன முழக்கம் இட்டனர். பின் ஆர்ப்பாட்டத்தில் பேசிய திமுக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏவுமான டி.ஜெ.கோவிந்தராஜன் பேசுகையில் அரசியல் சாசனத்தை உருவாக்கிய சட்ட மேதையை உள்துறை அமைச்சர் அவமரியாதையாக பேசியது கண்டிக்கத் தக்கது என்றும் இதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும்
என்றும் பேசினார்.
0 Comments