சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் சத்துணவில் பணிபுரியும் சமையல் உதவியாளர்களுக்கு ஒரு நாள் புத்தாக்க பயிற்சி முகாம் கும்மிடிப்பூண்டி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது


திருவள்ளூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் கும்மிடிப்பூண்டி மற்றும் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரியும் சத்துணவு சமையலர், சமையல் உதவியாளர்களுக்கு ஒரு நாள் புத்தாக்க பயிற்சி கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது .

இந்த பயிற்சியை கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர் துவக்கி வைத்தார்.இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் புஷ்பலதா, ஓய்வு பெற்ற துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பரமசிவம், வட்டார ஒருங்கிணைப்பாளர் திலகவதி,துணை வட்டார வளர்ச்சி அலுவலர்(தணிக்கை) நாகப்பன்,மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவன், சத்துணவு உதவி அலுவலர் ஆனந்தன் ஆகியோர் பங்கேற்றனர்.



Post a Comment

0 Comments