திருவள்ளூர் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் வடக்கு ராஜ வீதியில் செயல்பட்டு வருகிறது இந்த அலுவலகத்தில் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் பணிகள் முடித்து அலுவலகத்தை அதிகாரிகள் கூட்டிச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் திடீரென காலை 6.30 மணி அளவில் அலுவலகத்தில் இருந்து புகை வருவதை அறிந்த அலுவலகத்தின் இரவு காவலர் தீயணைப்பு துறைக்கு அளித்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் அலுவலகத்தில் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.
இதனை அடுத்து எரிந்த அலுவலகம் மாவட்டம் மலேரியா அலுவலர் மதியழகன் அலுவலகம் என்பதும் இதில் அலுவலகத்தில் இருந்த 8க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர் 3க்கும் மேற்பட்ட ஏசி பிரிண்டர் என 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது.
மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மலேரியா விவரங்கள் குறித்த ஆவணங்கள் முழுமையாக தீயில் கருகி உள்ளதால் மீண்டும் மலேரியா விவரங்களை சேகரிப்பது மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்திற்கு ஒரு சவாலாகவே இருக்கும் எனவும் இதனால் மலேரியா குறித்த பொதுமக்களின் விவரங்கள் அடிப்படையில் நோய்களுக்கு தீர்வு கொடுப்பது கடினமாக இருக்கும் எனவும் தெரியவந்துள்ளது.
இது குறித்து திருவள்ளூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments