தருமபுரியில் இருந்து பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய 4 மாத கைக்குழந்தையுடன் மருத்துவ தம்பதியினர் பழனிசாமி மற்றும் கிருத்திகா ஆகியோர் காரில் சென்றுள்ளனர். காரை கிருத்திகாவின் தம்பி பாவேந்தர் என்பவர் கூகுள் மேப் பார்த்தபடி ஓட்டிச் சென்றார்.
அப்போது, ஒட்டன்சத்திரம் வழியாக பழனிக்கு செல்ல ஒரு மண் சாலையை கூகுள் மேப் காட்டி உள்ளது. இதன் வழியாக சென்றபோது கார் சேற்றில் சிக்கிகொண்டது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் காரில் இருந்தவர்களை பத்திரமாக மீட்டனர்.
0 Comments