சினிமாவை விட்டு விலக திட்டமிட்ட கீர்த்தி சுரேஷ்..?

 


தமிழ், மலையாளம், தெலுங்கு மொழியில் பிரபல நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். தற்போது இவர் அட்லி தயாரிப்பில் உருவான 'பேபிஜான்' என்ற இந்தி படத்தில் வருண் தவானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். கடந்த 25-ம் தேதி வெளியான இப்படம் வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும், 'ரிவால்வர் ரீட்டா', 'கண்ணி வெடி' ஆகிய படங்களிலும் கீர்த்தி நடித்து வருகிறார். இவற்றின் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தில் உள்ளன.

இதற்கிடையே, கடந்த 12-ந் தேதி கீர்த்தி சுரேஷ் தனது பள்ளி கால நண்பரான ஆண்டனியை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் கோவாவில் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்றது.இந்நிலையில், சினிமாவை விட்டு விலக கீர்த்தி சுரேஷ் திட்டமிட்டுள்ளதாக தகவல் பரவி வருகிறது. இது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இருந்தபோதிலும் இதனை கீர்த்தி சுரேஷ் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments