கோயம்புத்தூரில் கடந்த 1998 ஆம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கடந்த 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 10 பெண்கள், ஒரு குழந்தை உட்பட 46 பேர் உயிரிழந்தனர். இதில் 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். தேர்தல் பிரச்சாரத்திற்காக கோயம்புத்தூருக்கு அத்வானி வர இருந்த நேரத்தில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளி அல் உம்மா இயக்கத் தலைவர் எஸ்.ஏ.பாஷா. இவர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய 13 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் பாஷா கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் இன்று உடல் நலக்குறைவினால் காலமானார். அதாவது சிறையில் இருந்து இவர் பரோலில் வெளியே வந்த நிலையில் உடல்நல குறைவினால் காலமானார்.
0 Comments