விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் அருகே ரயில் தண்டவாளத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னை-புதுச்சேரி ரயில் திண்டிவனம் அருகே வந்தபோது கடுமையான அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக ரயிலை நிறுத்தியுள்ளனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு விரிசல் சீரமைக்கப்பட்டு ரயில் புதுச்சேரிக்கு புறப்பட்டு சென்றது.
தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் பல ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டது. அதிர்வுகள் கேட்ட நிலையில் உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
0 Comments