தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொள்ளாததற்கு திமுக கூட்டணியின் அழுத்தம் தான் காரணம் என்று கூறினார். ஆனால் இதனை மறுத்த திருமாவளவன் அழுத்தம் கொடுத்து இணங்கி போகக் கூடிய அளவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியோ அல்லது நானோ பலவீனமானவன் கிடையாது. அதன்பிறகு கூட்டணி பற்றி பேராசை கிடையாது எனவும், திமுக கூட்டணியில் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி இருக்கும் என்றும் கூறினார்.
இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவனிடம் நிருபர்கள் அது பற்றி கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது, எனக்கு விஜய் மீது எந்தவிதமான சங்கடமும் கிடையாது. அவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டது மகிழ்ச்சி தான். எனக்கு ஒரே மேடையில் விஜயுடன் நிற்பதில் எந்த சங்கடமும் கிடையாது. ஆனால் நான் ஒரே மேடையில் விஜயுடன் நின்றால் அரசியல் சூதாட விரும்புவர்கள் தமிழக அரசியல் களத்தில் களேபேரத்தை உருவாக்குவார்கள். அதற்கு இடம்பெறக்கூடாது என்பதற்காகத்தான் நான் அந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளவில்லை என்று கூறினார்.
0 Comments