அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேச்சு...... தமிழகம் முழுவதும் இன்று திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

 


நாடாளுமன்றத்தில் நேற்று அரசியலமைப்பு சட்டம் குறித்த விவாதத்தின் போது உள்துறை மந்திரி அமித்ஷா அம்பேத்கர் என்று கூறுவது இப்போது பேஷன் ஆகிவிட்டது எனவும் அம்பேத்கர் பெயரை சொல்வதற்கு பதிலாக கடவுள் பெயரை சொன்னால் கூட அடுத்த 7 ஜென்மங்களுக்கு சொர்க்கத்திற்கு போகலாம் என்றும் கூறினார். அமித்ஷாவின் பேச்சுக்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் கண்டனம்  தெரிவித்த நிலையில் பிற மாநில முதல்வர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் இன்று அமித்ஷா பேச்சுக்கு ‌ கன்னடம் தெரிவித்து திமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடைபெற இருக்கின்றது. மேலும் அந்த வகையில் இன்று காலை 11:30 மணியளவில் திமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு அமித்ஷா தன்னுடைய பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

Post a Comment

0 Comments