பெரியாரின் நினைவு நாளை முன்னிட்டு ஓஎன்ஜிசி பிற்படுத்தப்பட்ட ஊழியர்கள் நலச்சங்கம் சார்பில் அமைச்சர் மெய்யநாதன் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கினார்


மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த மன்னம்பந்தல் ஊராட்சியில் பெரியாரின் 51 வது நினைவு நாளை முன்னிட்டு ஓஎன்ஜிசி பிற்படுத்தப்பட்ட ஊழியர்கள் நலச்சங்கம் சார்பில் மன்னம்பந்தல் வளாகத்தில் நடைபெற்ற மாணவ மாணவிகளுக்கு பிற்படுத்தப்பட்ட ஊழியர்கள் நலச்சங்கம் நிதியிலிருந்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி புத்தகப் பை,கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்ட ஊழியர்கள் நலச்சங்கம் தலைவர் சிவசங்கர் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்து வரவேற்றார்.பிற்படுத்தப்பட்ட ஊழியர்கள் கூட்டமைப்பு தலைவர் சேதுபதி,பொது செயலாளர் தனசேகர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன்,கலெக்டர் மகாபாரதி,எம் எல் ஏக்கள் நிவேதா முருகன்,பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு 90 மாணவ மாணவிகளுக்கு காசோலை வழங்கினர்.

மன்னம்பந்தல் நடுநிலைப்பள்ளியில் பயின்று வரும் 50 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வாங்கினார். தொடர்ந்து மயிலாடுதுறை நகர் பகுதி  தரைக்கடை வியாபாரிகள் சுமார் 15 நபர்களுக்கு நிழல் தரும் மிக பெரிய நிழல் குடைகள் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒரு ஊனமுற்ற பெண்ணிற்கு மின் சாதன மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் வழங்கப்பட்டது இதில் ஓஎன்ஜிசி செயல் இயக்குநர் உதய் பஸ்வான் மற்றும் மனிதவள பொது மேலாளர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி இறுதியில்செயலாளர் மணிவண்ணன் நன்றி கூறினார்.

Post a Comment

0 Comments